எனக்காக யாவையும் செய்தவரே
நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
ஜீவன் தந்து என்னை மீட்டவர்
நன்றி சொல்லி உம்மை பாடுவேன்
நன்றி பலி செலுத்தியே
ஆராதிப்பேன் உயர்த்துவேன்
ஆபத்திலே என்னை காக்கும் என் தேவா
அறனும் என் கோட்டையும் நீர் தானே
அதிசயம் செய்து
புது பெலன் தந்து
உமக்கென்று கண்டு கொண்டீர்
தனிமையில் என் துணையாக நின்றீர்
ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்
வாக்கு தந்து
பாட செய்து
உம் வார்த்தையால் என்னை போஷித்தீரே
துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்
தீமையை நன்மையாய் மாற செய்தீர்
அபிஷேகம் தந்து
வரங்கள் ஈந்து உம்
கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர்